ஆறாம் அறிவு இல்லாமல் போயிருந்தால்!!!
பறவையோடு பறந்தும்
விலங்குகளோடு விளையாடியும்
எந்த கவலையும் இல்லாமல்
இயற்கையோடு இணைந்து
பூமி தாயின் முகங்களில்
எல்லை கோடுகள் வரையாமல்
ஜாதி சடங்குகள் இல்லாத
கொலை கொள்ளைகள் இல்லாத
நிலவுலகில் நானும்
வாழ்ந்திருப்பேன் நிம்மதியாக
இந்த ஆறாம் அறிவு இல்லாமல் இருந்திருந்தால்!!!
இறந்த பின்பு கோவணம் கூட சொந்தமில்லை
என்பதை உணரவைத்ததும் இந்த ஆறாம் அறிவுதான்
பிறக்காத பிள்ளைக்கும்
அந்த பிள்ளைக்கு பிறக்க போகும் பேரனுக்கும்
சொத்து சேர்க்கும் மனித பதராக
என்னை மாற்றி அமைத்ததும்
இந்த ஆறாம் அறிவு தான்!!!
உழைத்து உண்டிருப்பேன்
தொப்பையை குறைக்க ஓடியிருக்க மாட்டேன்
எறும்புகளை போல சுறுசுறுப்பாக இருந்துருப்பேன்
என் வாழ்நாள் முடிந்திருக்கும்
சுகர் பிபி க்கு விளக்கம் தெரியாமலே
இந்த ஆறாம் அறிவு இல்லாமல் இருந்திருந்தால்!!!
காதலித்து ஏமாற்றும் வித்தையும்
கல்யாணம் செய்து கழட்டிவிடும் கலையும்
தெரியாமலே இறந்திருப்பேன்
இயற்கையை அழித்து
அதன் இரத்தத்தில் வாழும் வித்தையும் தெரியாமல்
ஐந்தறிவுள்ள மிருகமாகவே வாழ்ந்து
ஐந்தறிவுள்ள மிருகமாகவே இறந்து
எனக்கு கிடைத்த இந்த இயற்கையை
அடுத்த தலைமுறைக்கு கொடுத்திருப்பேன்
இந்த ஆறாம் அறிவு இல்லாமல் இருந்திருந்தால்!!!
லைக்குகளுக்காக ஏங்கியும்
ரிட்விட்க்காக காத்திருந்தும்
செல்பிக்காக போராடியும்
என் வாழ்நாளை
அடகு வைத்திருக்க மாட்டேன்
இந்த ஆறாம் அறிவு இல்லாமல் இருந்திருந்தால்!!!
நன்றி
ஸ்ரீ
[குறிப்பு: இந்த கருத்தை தெரிவிக்க வாய்ப்பு இருந்திருக்காது இந்த ஆறாம் அறிவு இல்லாமல் இருந்திருந்தால்...]

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக