தமிழக முதலமைச்சர் நேற்று இந்திய பிரதமர் அவர்களை நேற்று டெல்லியில் சந்தித்தார். தமழக ஊடங்கங்கள் அனைத்திற்கும் இந்த நிகழ்வு நல்ல தீனியாக அமைந்தது உண்மை. எப்போதும் இல்லாமல் இப்போது மட்டும் ஜெயலலிதா அவர்கள் இப்போது மட்டும் பிரதமரை சந்தித்ததற்கும் உச்சநீதி மன்றத்தில் இருக்கும் சொத்துகுவிப்பு வழக்கிற்கும் தொடர்பு படுத்தி பரவலாக பேசப்படுகின்றது. இதனை பேசுபவர்கள் சாதாரண மக்கள் அல்ல அனைத்தும் தெரிந்த அரசியல்வாதிகள். அவர்கள் இப்படி பேசும்போது அவமதிப்பது உச்சநீதிமன்றத்தையும் இந்திய அரசியல் அமைப்பையும் என்பதை மறந்துவிட்டு பேசுகின்றார்கள். பிரதமர் உள்பட யாரும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என்பதே உண்மை.
இப்பொழுது ஜெயலலிதா அவர்கள் சந்தித்திருப்பது தமிழகத்தின் 29 அம்ச கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கவே என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கின்றது. நிச்சயமாக பிரதமர் அவர்கள் தங்களுக்கு மாநிலங்களவையில் ஆதரவு தருமாறு ஜெயலலிதா அவர்களை நிச்சயம் கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது. மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத பாரதிய ஜனதா கூட்டணிக்கு மசோதாவை நிறைவேற்ற நிச்சயமாக அதிமுகவின் ஆதரவும் தேவை.
29 அம்ச கோரிக்கைகள் வருமாறு:
1. காவிரி மேலாண்மை வாரியம் தீர்ப்புக்கு எதிரான மேகதாது அணைக்கட்டும் முயற்சிக்குத் தடை விதிக்க வேண்டும்.
2. நதிநீர் இணைப்புச் செய்யப்பட வேண்டும்.
3. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
4. மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
5. இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்கள் மற்றும் அவர்களின் 92 படகுகளை விடுவிக்க வேண்டும்.
6. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
7. அந்தோனியார் கோவில் சீரமைப்பை தமிழக மீனவர்களின் ஒப்புதலுடன் நடத்த வேண்டும்.
8. கூடங்குளம் இரண்டாவது அலகிற்கான பணிகள் விரைவு படுத்தப்பட வேண்டும்.
9. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
10. பெட்ரோலிய பொருட்களுக்கு சேவை வரி விலக்கு அளிக்க வேண்டும்.
11. ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட வேண்டும்.
12. தமிழை வழக்காடும் மொழியாக்க வேண்டும்.
13. ரூ.25,912 கோடி தேசிய பேரிடர் நிதியிலிருந்து பெற 2 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் ரூ.1,735 கோடி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
14. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட வேண்டும்.
15. மெட்ரோ ரயில் சேவை முழுமையடைய வேண்டும்.
16. பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க வேண்டும்.
17. ஜி.எஸ்.டி. மசோதா திருத்தம் செய்யப்பட்டால் ஆதரவு.
18. தமிழக அரசு கோரிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை.
19. உணவு தானியங்கள் ஒதுக்கீடு குறையக் கூடாது.
20. அரசு கேபிள் சேவைக்கு டிஜிட்டல் உரிமம் அளிக்கப்பட வேண்டும்.
21. கெயில் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும்.
22. மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறையக் கூடாது.
23. காவேரி மேலாண்மை ஒழுங்குமுறைக் குழு அமைப்பு.
24. தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.
25. மெட்ரோ ரயிலுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
26. மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த மாநில அரசை நிர்பந்திக்கக் கூடாது.
27. மாநில அரசுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிதி உதவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
28. வெள்ள சேதங்களை சீர் செய்ய கூடுதல் நிதி தேவை.
29. அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக