புதன், 6 ஜூலை, 2016

உங்களுக்கு தெரியுமா உங்களோட பர்சனல் மெயிலை கூட கூகிள் படிக்கின்றது


ஆமாம், என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா. உண்மை அது தான்,நீங்கள் அனுப்பும் மெயில் மற்றும் உங்களுக்கு வரும் மெயில் என அனைத்தையுமே கூகிள் படிக்கின்றது.


உலகளவில் பெரும்பாலான மக்களால் உபயோகப்படுத்தப்படும் மெயில் சர்வீஸ்களில் முக்கியமான இடம் கூகிள் மெயிலுக்கு உண்டு. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரும்பாலான மக்கள் இலவசமாகவும் எளிதாகவும் பெறக்கூடிய கூகிள் மெயிலயே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

கூகிள் நாம் என்ன தேடுகின்றோம் என்ன பொருள்களை சர்ச் செய்கின்றோம் போன்ற தகவல்களை சேகரிக்கும் என்பதை பெரும்பாலானவர்கள் அறிவோம். ஆனால் நாம் பர்சனலாக பயன்படுத்தும் மெயிலையும் நீங்கள் அனுப்பும் மெயில் மற்றும் உங்களுக்கு வரும் மெயில் என எதையும் கூகிள் விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை. நமது மெயிலை ஏதோ கூகிள் திருட்டுத்தனமாக படிக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

ஆமாம் நமது அனுமதியுடன் தான் கூகிள் நமது மெயிலை படிக்கின்றது. நாம் கூகிளில் புதிய மெயிலை பதிவு செய்யும் போது நாம் அழுத்தும் "Google Terms and Conditions" பட்டனில் தான் அத்தனையும் இருக்கின்றது. நம்மில் எவரும் அதில் என்ன இருக்கின்றது என்று படிக்காமலேயே OK சொல்லி விடுவோம்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று நீங்கள் படித்தால் கூகிள் நமது தகவல்களை படிக்கலாம் என்று நாம் அளித்த அனுமதியை காணலாம்.

https://www.google.co.in/intl/en/policies/terms/regional.html







ஆக எத்தனையோ முறை பாதுகாப்பு கேள்விகள் கேட்டாலும் எவ்வளவு கஷ்டமான பாஸ்வேர்ட்களை நாம் வைத்தாலும் அதையும் கடந்து கூகிள் நமது மெயில்களை படிப்பது என்பது ஏமாற்றமே!!

இவை அனைத்தையும் செய்வது "Google Adsense" மூலமாக நமக்கு தகுந்த விளம்பரத்தை நாம் இணையத்தை பயன்படுத்தும் போது காட்டி,  அதன் மூலமாக வருமானம் ஈட்டவே..

ஸ்ரீ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக