ஞாயிறு, 24 ஜூலை, 2016

அடேங்கப்பா நாம் தினமும் யூஸ் பண்ணும் வாட்ஸ் அப் எத்தனை பாதுகாப்பானது தெரியுமா உங்களுக்கு?

நாம் அன்றாடம் நமது நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை வேறு யாரும் பார்க்க வாய்ப்பு உண்டா என்ற அச்சம் நம் அனைவருக்கும் இருக்கும். இணைய உலகில் நிச்சயம் தகவல்கள் திருட்டு என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆனாலும் வாட்ஸ் அப் இந்த கூற்றை உடைத்து நமது தகவல்களை எவரும் படிக்கவோ பெறவோ முடியாது என்று காட்டியுள்ளது.



ஆம்,நாம் அனுப்பும் அத்தனை செய்தியும்,புகைப்படமும்,வீடியோவும் எவராலும் படிக்க முடியாத அளவுக்கு end to  end encrypt முறையில் மாற்றியமைக்கப்பட்டு அனுப்ப படுகின்றது. நாம் ஒவ்வொரு முறை செய்தி அனுப்பும் போதும் அந்த செய்தி 60 ரேண்டம் எண்களால் என்கிரிப்ட் செய்யப்பட்டு மீண்டும் அந்த செய்தி பெறுபவரின் வாட்ஸ் அப் செயலியில் மீண்டும் டிகிரிப்ட் அதாவது அதே 60 இலக்க  எண்களை  கொண்டு மாற்றி அமைக்கப்பட்டு நாம் படிக்கும் படி தெரிகின்றது. அந்த 60 டிஜிட் எண் என்னவென்று தெரியாமல் யாரும் அந்த செய்தியை படிக்க இயலாது. அந்த 60 இலக்க ரேண்டம் எண் செய்தியை அனுப்புபவருக்கும் செய்தியை பெறுபவருக்கு ஏன் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கூட தெரியாது என்பதே உண்மை. இந்த 60 இலக்க ரேண்டம் எண் நாம் அனுப்பும் ஒவ்வொரு செய்திக்கும் மாறுபடும்.

இதை நாம் உறுதி செய்துகொள்ள வாட்ஸ் அப் நமக்கு ஒரு வாய்ப்பினை வழங்கி உள்ளது. உங்கள் நண்பரின் contact info -ல் சென்று பார்த்தால் பின்வரும் செய்தி இருக்கும் அதை கிளிக் செய்து பார்த்தால் ஒரு 60 இலக்க ரேண்டம் எண் தெரியும் அதே எண் உங்கள் நண்பரின் வாட்ஸ் அப் - ல் உங்கள் contact info இல் கிளிக் செய்தால் வரும் 60 இலக்க  ரேண்டம் எண்ணுடன் ஒத்து போகும். அல்லது ஸ்கேன் ஆப்சனை யூஸ் செய்து ஸ்கேன் செய்து பார்த்தால் ஒரு பச்சை நிற டிக் மார்க் வந்தால் நீங்களும் உங்கள் நண்பரும் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் பாதுகாப்பானவை என்று உறுதி செய்து கொள்ளலாம்.



குறிப்பு : இந்த 60 இலக்க  எண்  ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே, ஒவ்வொரு தகவல்களுக்கும் வேறு வேறு 60 இலக்க எங்கள் உருவாகி உங்கள் செய்தி என்கிரிப்ட் செய்யப்படும்...

மேலும் பயன்படுத்துவோரின் செய்திகள் அனுப்பப்பட்டவுடம் வாட்ஸ் அப் சர்வரில் இருந்து நீக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் உங்கள் செய்தியை பிற்காலத்தில் கூட எவராலும் படிக்க முடியாது.

வாட்ஸ் அப் எவ்வளவு பாதுகாப்பானது என்பதற்கு இந்த செய்தி மிக பெரிய உதாரணம். பிரேசில் நாட்டில் ஜூலை 20ம் தேதி வாட்ஸ் அப் செயலிக்கு  பிரேசில் நாட்டு நீதிமன்றம் தடை விதித்தது. இது இந்த ஆண்டில் வாட்ஸ் அப் செயலுக்கு மூன்றாவது முறையாக விதிக்கப்படும் தடை. கிரிமினல் குற்றவாளியின் வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் குறித்த தகவலை அந்த நிறுவனம் போலீசாருக்கு வழங்க மறுத்ததாக வாட்ஸ்அப்புக்கு தடை விதித்தது நீதிமன்றம். ஆனால் தாங்களே நினைத்தாலும் பயனாளர்கள் அனுப்பும் அந்த தகவல்களை படிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டு நீதிமன்றம் கேட்டும் தங்களால் கூட அந்த தகவல்களை படிக்க முடியாது என்று வாட்ஸ் அப் கூறும் போதே நாம் அனுப்பும் செய்திகள் எவ்வளவு பாதுகாப்பானவை என்று தெரிகிறதல்லவா!!!

*****தவறான செயல்களுக்காக அனுப்பப்படும் தகவல்களையும் படிக்க முடியாது எனும் போதும் சற்று கவலையாக இருக்கின்றது. எந்த ஒரு தொழில்நுட்பத்திலும் நல்லவையும் இருக்கும் கெட்டவையும் இருக்கும் என்பதே உண்மை.

மேலும் வாட்ஸ் அப் செக்யூரிட்டி குறித்து பின்வரும் முகவரியில் படிக்கலாம்...

https://www.whatsapp.com/faq/en/general/28030015
https://www.whatsapp.com/security/

இது போன்ற மேலும் தகவல்களை படிக்க வாருங்கள்

http://www.pamarankaruthu.com/

நன்றி
ஸ்ரீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக