வியாழன், 12 ஜனவரி, 2017

போகினு சொல்லிக்கிட்டு இப்புடி பண்ணிட்டீங்களே சென்னை வாசிகளே ? இது பாரம்பரியம் அல்ல ...


அதிகாலையில்  சென்னை புகையில் மாட்டி மூச்சுவிட முக்கிக்கொண்டிருக்கின்றது .போகி வந்ததும் ஏதோ அதற்ககாவே வைத்திருந்ததை பொலவே பழைய பாய்கள் ஆடைகள் அதிகபட்சமாக டயர்கள் என அனைத்தையுமே எரிக்க ஆரம்பித்துவிட்டனர் .

ஏற்கனவே சுற்றுசூழல் காற்று மாசுபாட்டினால் ஆபத்தான நிலையை நோக்கிக்கொண்டு சென்றுகொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் போகி பெயரால் கட்டாயமாக கொழுத்தவேண்டும்  என்பதற்காகவே கொழுத்துவது விழா அல்ல .

கடந்த 2016 டிசம்பர் மாதம் பசுமை தீர்பாயம் திறந்தவெளியில் குப்பைகளை எரித்தால் 5000 அபராதம் என்றும் மொத்தமாக எரித்தால் 25000 வரை அபராதம் விதிக்கலாம் என்றும் இதற்கென வகுக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகளை செயல்படுத்துமாறு மாநில அரசாங்கத்தை  அறிவுறுத்தியிருந்தது ...ஆனால் போகி பண்டிகைக்கு மக்கள் இப்படி குப்பைகளை கொழுத்துவார்கள் என்பது தெரிந்திருந்தும் மாநில அரசாங்கம் மக்களிடம் விளிப்புணர்வை ஏற்படுத்த தவறிவிட்டன .

இதன் விளைவு மூன்று மாதங்களில் ஏற்படக்கூடிய காற்றுமாசுபாடு ஒரே இரவில் அடைய வைத்துவிட்டோம்  .

உடனே இதையும் பாரம்பரியம் விழா என்று பேச ஆரம்பித்துவிடாதீர்கள்  ...இதற்கும் பாரம்பரியத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது .

உலக நாடுகள் சுற்று சூழலை பாதுகாக்க பல திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில் மக்களும் மக்களுக்கு நெருக்கமாக இருக்க கூடிய மாநில அரசாங்கமும் பொறுப்பினை உணர்ந்து சுற்றுசூழல் பாதுகாப்பில் அக்கறைகொள்ள வேண்டும் ...

போகியன்று எதையாவது எரித்தே ஆகவேண்டுமென்றால் மனதில் உள்ள கவலையென்னும் குப்பைகளையும் தவறான எண்ணங்களையும் எரித்துவிட்டு புதிய மனதுடன் பொங்கல் கொண்டாடுங்கள் ...

அனைவருக்கும் போகி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக