ஜல்லிக்கட்டுக்கு நாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் உலகம் முழுவதுமிருந்து நமக்கு ஆதரவு பெருகியது. நாம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது உலகம் இன்னுமொரு மிகப்பெரிய போராட்டத்தில் திளைத்திருந்தது. ஆம் அமெரிக்காவில் பெண்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம்.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் அதிபராகும் இந்த வேளையில் அமெரிக்கா பெண்களின் இந்த போராட்டம் உலகத்தினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 33 லட்சம் பெண்களும் ஆண்களும் அமெரிக்காவின் 500 நகரங்களில் கூடி இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.மிகவும் அறவழியில் நடைபெற்ற இந்த போராட்டம் அமெரிக்கா வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக பார்க்கப்படுகின்றது.
நோக்கம் :
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் முக்கிய நோக்கம் "பெண்களின் உரிமை" ""எல்லையில் சுவர் எழுப்பாதே" "குடியேற்ற விதிகளை மாற்றாதே" "பெண்களின் மீதான தாக்குதலை நிறுத்து" போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெண்கள் சமத்துவக் கட்சியை சார்ந்த அல் ஜஸீரா பேசும்போது "நாங்கள் இங்கு கூடியிருப்பது எங்களுடைய ஒற்றுமையை காட்டுவதற்காக ,நாங்கள் டொனால்ட் ட்ரம்ப் சொல்லக்கூடிய பிரிவினைவாதத்தை முற்றிலுமாக எதிர்க்கிறோம். நாங்கள் வெளிநாட்டவர் மீதான டொனால்ட் ட்ரம்பின் எதிர்ப்பை முற்றிலுமாக கண்டிக்கிறோம். அவரின் இனவாதம்,பெண்கள் மீதான பார்வை என அனைத்தையும் எதிர்க்கிறோம் " என்றார்.
அமெரிக்காவில் மட்டுமல்லாது உலக நாடுகள் முழுவதிலும் இருந்து (யூரோப் ,ஆசியா,ஆப்பிரிக்கா ) இந்த போராட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்கள் பிங்க் பூனை வடிவிலான தொப்பிகளையும் சிலர் பிங்க் நிறத்திலான சால்வைகளையும் அணிந்திருந்தனர். இது தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்ட வீடியோவில் இருந்த டொனால்ட் ட்ரம்ப் ஐ நினைவூட்டுவதாகவே இருந்தது.
விடிவுதான் என்ன ?
தேர்தலுக்கு முன்பே பெண்கள் குறித்த தனது பார்வையில் தவறான எண்ணம் கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப் முதன்மை குடிமகனாக ஆன பிறகு எப்படி தனது பார்வையை மாற்றிகொள்ளப்போகிறார் என்று தெரியவில்லை. மேலும் அமெரிக்கா எல்லையில் சுவர் எழுப்புவேன் குடியேற்றம் கடுமையாக்கப்படும்' என்றெல்லாம் தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி நடக்க போகிறாரா என்றும் தெரியவில்லை.
முதல் கையெழுத்தே ஒபாமா கேர் திட்டத்தை நிறுத்த டிரம்ப் போட்டார். அவர் கட்சிக்காரர்களே ஒபாமா கேர் நல்ல திட்டம் என்று கூறியிருந்த நேரத்தில் அதை தடை செய்தார்.
ஆனால் இன்று பெரும்பாலான மக்கள் பெண்கள் உரிமைக்காகவும் இனவாதத்திற்கு எதிராகவும் அந்நியநாடுகளின் மீதான வெறுப்பிற்க்கு எதிராகவும் இருக்கும் நிலையில் இதை தன் அடையாளமாக கொண்டுள்ள டிரம்ப் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது கொள்கைகளில் மறுபடுவாரா? அப்படி அவர் மாறினால் அது இந்த போராட்டத்திற்கும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கும் அவரை சிறந்த அதிபராக கொண்டு செல்லும்.
மக்கள் தங்களது உரிமைகளுக்காக போராட துவங்கிவிட்ட்டார்கள். அது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்காக இருந்தாலும் சரி அமெரிக்காவில் பெண்கள் அவர்களின் உரிமைகளுக்காகவும் சரி. இது மக்களின் வெற்றியே..
ஒரு இனம் போராட துவங்கும் போது முன்னேறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக