*5 நிமிடம் செலவு செய்யுங்கள் நண்பர்களே ....*
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடுபவரா நீங்கள் ? கோப்புகளை படித்து தகவல்களை தெரிந்துகொள்வது கடினமென்பதால் உங்களுக்காகவே தகவல்கள் திரட்டப்பட்டு இங்கு தமிழாக்கம் செய்துள்ளேன் .....
*படியுங்கள் ...தெரிந்துகொள்ளுங்கள் ...பகிருங்கள் ...*
தற்போது நெடுவாசலில் மத்திய அரசு அனுமதி அளித்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டம் நடந்துவருகின்றது . இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மிக பெரிய சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் அதனால் விவசாயம் பாதிக்கப்படும் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்படும் என்பது அவர்களின் அச்சம் .
அரசாங்கமோ அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என விளக்கமளித்துள்ளது .
*ஹைட்ரோகார்பன் திட்டம் என்றால் என்ன ?*
இந்த திட்டமானது Directorate general of hytrocarban என்ற அரசு நிறுவனத்தின் மேற்பார்வையில் தொடங்கியது. இதன் பணி நாடு முழுவதும் சோதனை செய்து ஹைட்ரோகார்பன் உள்ள இடங்களை கண்டுபிடிப்பதே . 2015 இல் இந்திய அரசாங்கம் "Discovered Small Field " என்னும் மசோதாவை கொண்டுவருகிறது .2016 இல் ஹைட்ரோகார்பனை வெளியில் எடுக்கும் நிறுவனங்களுக்கான ஏலம் தொடங்கப்பட்டது .
இந்த மசோதாவின் மூலமாக அரசுக்கு வருமானம் வரும் கூடுதலாக ராயல்ட்டி மூலமாகவும் வருமானம் கிடைக்கும் .
இதற்கான % விவரங்கள் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளன .
இந்த புதிய மசோதா (Hydrocarbon Exploration and licensing Policy ) 18 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட ( New Exploration licensing Policy) kku மாற்றாக கொண்டுவரப்பட்டது . இந்த புதிய மசோதா அனைத்துவித ஹைட்ரோகார்பன் களுக்கும் பொருந்தும் விதமாக கொண்டுவரப்பட்டது .
மொத்தமாக 34 இடங்களுக்காக 134 நிறுவனங்கள் விருப்பமனு அளித்தன .அதில் 22 நிறுவனங்களும் 31 இடங்களும் இறுதி செய்யப்பட்டன .இதில் காரைக்காலும் தமிழகத்தில் உள்ள நெடுவாசலும் அடங்கும் .
*நெடுவாசல் ஒப்பந்தம் :*
நெடுவாசலில் உள்ள 10 sqkm இடம் கர்நாடகாவை சேர்ந்த ஜெம் நிறுவனத்திற்கு (JEM Laபார்atories private limited ) கொடுக்கப்பட்டுள்ளது . இந்த நிறுவனம் பாஜகவை சேர்ந்த முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜுனப்பா உருவாக்கியது என்பது கூடுதல் தகவல் .
காரைக்கால் நெடுவாசல் ஆகிய இரண்டு பகுதிகளிலிருந்தும் சுமார் 430000 மெட்ரிக் டன் அளவுக்கு ஆயில் அல்லது ஆயிலுக்கு நிகரான கேஸ் எடுக்கப்பட இருகின்றது .
பெட்ரோலியத்துறைக்கான இணையதளத்தில் நெடுவாசலில் எந்த 10 km இடங்கள் ஜெம் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட இருகின்றது என்ற தகவல் இல்லை .
*இது மீத்தேன் எடுக்கும் திட்டம்தானா ?*
2015 இல் தமிழக அரசு காவிரி படுகையில் இருந்து மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு தடை விதித்தது .. ஆனால் அதே திட்டம்தான் என்பது நெடுவாசல் மக்களின் அச்சம் .
இந்த திட்டம் குறித்து ஜெம் நிறுவனத்தாரிடம் கேட்டபோது நெடுவாசலில் நாங்கள் பெட்ரோலிய கச்சா எண்ணெய்யை மட்டுமே பிரித்தெடுக்க போகின்றோம் .
மேலும் ONGC துளையிட்ட பகுதியை ஆராய்வோம் , அதன் பிறகு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 km நிலப்பரப்பில் வேறு எங்கு எடுக்கலாம் என்று ஆராய்வோம் என்றனர் .
எந்த முறை பின்பற்றப்பட இருகின்றது
Gem நிறுவனமும் சரி ONGC யும் சரி இதுவரை எந்த முறையினை பின்பற்றி வாயுவை வெளியில் எடுக்க போகின்றோம் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றே கூறுகின்றனர் ..இதை அவர்கள் ரகசியமாக வைத்துள்ளனர் என்றே கூறலாம் .
*நெடுவாசல் மக்களின் எதிர்ப்பு என்ன ?*
இந்த திட்டம் தொடங்கினால் வேளாண்மை முற்றிலும் பாதிக்கப்படும் வறட்சி ஏற்படும் கடல் நீர் புகுந்துவிடும் மொத்ததில் எங்கள் பகுதியின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என்கின்றனர் .
நெடுவாசல் முற்றிலும் விவசாயத்தையே சார்ந்துள்ள பகுதியென்பது குறிபிடத்தக்கது .
*அரசின் நோக்கம் என்ன ?*
அரசின் அடிப்டையான நோக்கம் கச்சா எண்ணெய் இறக்குமதியை 10 % அளவுக்கு 2022 இல் குறைக்க வேண்டும் .
இந்திய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட பகுதிகளில் இருந்து சுமார் 15000 பேரல் கச்சா எண்ணெய் எடுக்கவும் 2 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் / டே (MMSCMD) வாயு எடுக்கவும் எதிர்பார்க்கின்றது .
மேலும் இந்த திட்டத்தின் மூலமாக இந்திய அரசுக்கு 46400 கோடி ரூபாய் வருமானமும் மாநில அரசுக்கு சுமார் 5000 கோடி ரூபாய் வருமானமும் வர வாய்ப்புள்ளது .மேலும் அரசு பங்கின் மூலமாக 9600 கோடி ரூபாய்யும் வருமானமாக கிடைக்கும் .
நெடுவாசல் மற்றும் காரைக்கால் திட்டத்தின் மூலமாக அரசுக்கு 300 கோடியும் மாநில அரசுக்கு ராயல்ட்டி மூலமாக 40 கோடியும் கிடைக்கும் ..
நன்றி
*ஸ்ரீதரன் (தமிழாக்கம் )*
*source : Priyanka thirumurthy (ஆங்கிலம் )*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக