வியாழன், 30 மார்ச், 2017

டூவீலர் விலை அதிரடி குறைப்பு? BS 3 , BS 4 ஒரு பார்வை ....


நீதிமன்ற தடை :

உச்சநீதிமன்றம் ஏப்ரல் ஒன்று முதல் BS 3 வாகனங்களை விற்பனை செய்ய அதிரடியாக தடை விதித்துள்ளது .தங்களிடம் 6 லட்சத்திற்கும் மேலான வாகனங்கள் இருப்பதால் இந்த தடையை இன்னும் சில மாதங்களுக்கு தள்ளிவைக்கவேண்டும் என்ற உற்பத்தியாளர்களின் கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு மக்களின் நலனே முக்கியம் என உச்சநீதிமன்றம் தடை விதித்தது .


இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் BS 3 தரச்சான்றுள்ள டூவிலர்களை விற்று தீர்க்க 12500 கும் மேல் விலையை குறைந்துவிட்டன .
சில மாதங்களுக்கு முன்பாகவே BS 4 படி வாகனத்தில் மாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது .

அதென்ன BS தரம் : 

BS என்பதற்கான விளக்கம் Bharat Stage  . வாகனங்களில் வெளியிடப்படும் புகையின் அளவினை கண்காணிக்கவும் கட்டுபடுத்தவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்டதே BS .
இது மேற்கத்திய நாடுகளில் நடைமுறையில் இருக்கும் யூரோpean Emission Standards ஒத்ததே .



இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு முதன் முதலாக பெட்ரோல் வாகனங்களுக்காகவும் அதற்கு அடுத்த ஆண்டு டீசல் வாகனங்களுக்காகவும் உருவாக்கப்பட்டது .2010 இல் BS 3 தர முறையினை இந்தியா அறிமுகப்படுத்தியது . அதே 2010 இல் உலக நாடுகள் Euro 4 ஐ மேற்கத்திய நாடுகள் அறிமுகப்படுத்தியிருந்தன .

மேற்கத்திய நாடுகள் Euro 5 Euro 6 நடைமுறைப்படுத்தியிருக்கும் தற்போதைய நிலையில்தான் இந்திய அரசு BS 4 றினை அமல்படுத்த முன்வந்துள்ளது .வரவேற்கப்பட வேண்டியது .

எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமானல் BS 3 தரத்துடன் உருவாக்கப்படும் வாகன இன்ஜினிலிருந்து வெளிப்படும் புகை மாசின் அளவு BS 4 தரத்துடன் உருவாக்கப்படும் வாகனத்தில் 80 % குறைவாக இருக்கும் ..ஆகவே சுற்றுசூழல் பாதுகாப்பில் இது மிக முக்கிய நகர்வாக பார்க்கப்படுகின்றது .



சந்தேகங்கள் : 

இதற்கு முன்பாக தயாரிக்கப்பட்ட வாகனங்களில் வெளிப்படும் புகையின் அளவினை கட்டுபடுத்த அரசாங்கம் என்ன செய்ய போகிறது ?

நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்த பிறகும் ஏப்ரல் 1 க்கு முன்பாக விற்க கூடாது என்கிற உத்தரவை பயன்படுத்தி அதற்கு முந்தைய தேதிகளில் 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விலைகுறைப்பு செய்து விற்பதால் இந்த வாகனத்தால் சுற்றுசூழல் பாதிக்கப்படாதா ?



இந்தியாவில் தற்போது வாகன புகை சோதனை நடத்தப்படுவதே இல்லை . அதனை அரசாங்கம் எப்படி கையால போகிறது ?

எப்படியோ இப்போதாவது அரசாங்கம் இந்த முடிவினை கொண்டுவந்ததே என வரவேற்கலாம் ..

நாமும் வாகனங்களை முறையாக பராமரித்து சுற்றுசூழலை காப்போம்  .

நன்றி
ஸ்ரீ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக