திங்கள், 27 மார்ச், 2017

MLA க்கு போட்டியிட வயது வரம்பு குறைக்கப்பட வேண்டுமா ?


சென்னையைச் சேர்ந்த சவுமியா (௨௩) என்கிற பெண் ஆர்கே நகர் இடைதேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் . அவரது மனு பரிசீலனைக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது .  இந்திய அரசியலமைப்பு சட்டப்படி 25 வயது நிரம்பியவரே போட்டியிட முடியும் . சவுமியாவுக்கு 23 வயது மட்டுமே நிரம்பியிருப்பதால் மனு நிராகரிக்க பட்டது .
இதனை எதிர்த்து சவுமியா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் 18 நிரம்பியவர்களுக்கு ஓட்டுபோட தகுதி வழங்கிவிட்ட பிறகு 25 வயதில்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்பது தவறு என்றும் தனது மனுவை  ஏற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டுமெனவும் கோரியுள்ளார் .
என்ன செய்யலாம் :
எதிர்கால இந்தியா இந்தியர்களின் கைகளில் என்று பறை சாற்றிடும் எந்த கட்சியின் தலைவர்களும் இளைஞர்கள் இல்லை .
இந்தியாவில் பிரதமர் முதல்வர் அமைச்சர் என பார்த்தோமானால்  80 விழுக்காடு 50 60 70 + வயதுடையவர்களே இருக்கின்றனர் .
இந்தக்கால இளைய சமூகம் தொழிநுட்ப வளர்ச்சியின் பயனால் அரசியலை மிக இளைய வயதிலேயே கற்றுக்கொண்டுவிடுகின்றது ..அப்படி இருக்கும்போது 18 வயதிலே வாக்களிக்கும் உரிமை கொண்ட ஒருவனால் தேர்தலில் போட்டியிடவும்  முடியும் .
பார்க்கலாம் உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது என்பதை ....
பாமரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக