கருணாநிதி அவர்கள் அதை செய்யாமல் போனதற்கான விலையை இன்றும் என்றும் கொடுத்துகொண்டே இருப்பார் .
ஆமாம் கருணாநிதி அவர்களின் வைரவிழாவிற்காக அவரது பல செயல்களையும் சாதனைகளையும் படைப்புகளையும் திறமையையும் பாராட்டிடும் அதேநேரத்தில் அவர் மீது இன்றும் என்றும் தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் .
ஈழத்தின் மண்ணில் தமிழ் பிள்ளைகளின் ரத்தமும் சதையும் கலந்து உயிரும் மானமும் காற்றில் கலந்து ஒரு இனமே படுகொலை செய்யப்படுவதை உணர்ந்த தெரிந்த கருணாநிதி அவர்கள் மத்திய அரசுக்கு போதிய நெருக்குதல் கொடுக்க தவறிவிட்டார் .
மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லையென்றால் தமிழின தலைவனாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் .ஆனால் அதை செய்யாமல் வரலாற்றுப்பிழை செய்துவிட்டார் .
ஆமாம் வரலாற்றுப்பிழை செய்துவிட்டார் .
அவர் ராஜினாமா செய்திருந்தால் நிச்சயமாக தமிழ் உறவுகள் காப்பாற்றப்பட்டு இருக்கும் . கருணாநிதி அவர்களை தமிழினமே தலைவனாக கொண்டாடியிருக்கும் . தியாகம் செய்த ஆட்சியை மீண்டும் தமிழ் மக்கள் கொடுத்திருப்பார்கள் .
ராஜினாமா செய்தும் ஒன்றும் நடக்காமல் போயிருந்தால் மிகப்பெரிய தமிழின தலைவனாக அடையாளம் காணப்பட்டு இருப்பார் .
கலைஞரின் சாதனைகளில் இந்த கரும்புள்ளியும் இடம் பெரும் .
பாமரன் கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக