தற்போது ஒரு ஹாஸ்டேக் தொடங்கப்பட்டுள்ளது உதயசந்திரன் அவர்களை மாற்றக்கூடாது என வலியுறுத்தி....இது எந்த அளவுக்கு நன்மை செய்யும் என தெரியவில்லை .
#stand_with_Udayachandran_IAS
சகாயம் IAS எப்படி நமக்கானவரோ அதற்கு சற்றும் குறையாதவர் உதய சந்திரன் IAS . இருவருமே மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளவர்கள் .
சகாயம் IAS போன்ற திறமையாக மக்களின் ஆதரவை பெற்ற ஒருவர் ஏன் மாவட்ட ஆட்சிதலைவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு ஏதோ ஒரு துறைக்கு ஆணையராக போடப்பட வேண்டும் .
காரணம் எளிது , அரசியல் கட்சி தலைவர்களுக்கு மட்டுமே மக்களிடத்தில் நல்ல பெயர் பரவிட வேண்டும் . அதைவிடுத்து மூன்றாவது நபராக உள்ள அரசாங்க அதிகாரிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதை ஆட்சியாளர்கள் விரும்புவது இல்லை . அதுதானே சகாயம் அவர்களின் வாழ்க்கையிலும் நடந்தது .
இப்போது உதய சந்திரன் IAS , இந்த ஆட்சியில் இப்படிப்பட்ட நல்ல திறமையான ஒருவர் பள்ளிக்கல்வித்துறைக்கு நியமனம் செய்யபட்டதே அரிது . அதற்ககாவே செங்கோட்டையன் அவர்களை பாராட்டிட வேண்டும் .
ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் , பள்ளிக்கல்வித்துறையில் நன்மை நடந்தால் காரணம் அதிகாரி , ஊழல் நடந்தால் காரணம் அமைச்சர் என பொறுப்பற்று பேசுகின்றோம் .
என்ன செய்ய வேண்டும்
எளிது , அரசியல் கட்சி தலைவர்கள் புகழை எதிர்பார்ப்பார்கள் ..பரவாயில்லையே அதில் தவறும் இல்லை ... பள்ளிகல்வித்துறையில் நடக்கும் மாறுதல்களுக்கு அதிகாரியை காரணமாக முதலில் சொல்லாமல் அமைச்சரை சொல்லலாம் ...அது அமைச்சருக்கு உத்வேகத்தை அளிக்கும் .
தற்போது ஒரு ஹாஸ்டேக் தொடங்கப்பட்டுள்ளது உதயசந்திரன் அவர்களை மாற்றக்கூடாது என வலியுறுத்தி ...
ஆனால் இது ஆதரவுக்கு பதிலாக எதிர்கருத்தையே கொடுக்கும் ...நல்லது செய்பவர்களை இந்த காலத்தில் பாதுகாப்பது என்பது ஒரு கலை ... அதைத்தான் நாம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும் ..
உதய சந்திரன் அவர்களை மாற்றினால் சகாயம் அவர்களை மாற்றியபோது என்ன செய்தோமோ (அமைதியாக ) அதையே தான் செய்வோம் .....அதற்கு அதிகாரியை தூக்கி கொண்டாடுவதை விட்டுவிட்டால் அவர்கள் இன்னும் பல நல்லது செய்வார்கள் .
சும்மா இருக்கமுடியாமல் ஆதரவு என்கிற பெயரில் எதையாவது எழுதிவிட்டு போக வேண்டாம் ...
பாமரன் கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக