உச்சநீதிமன்றம் சென்றால் கூட 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது தவறானது என்பது தான் இறுதி தீர்ப்பாக வரும் . இது உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே சபாநாயகருக்கு தெரியும் .
உதாரணம் , ஆளுநரிடம் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரை மாற்றிட வேண்டும் என முறையிட்டபோது அந்த மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை . காரணமாக அவர் தெரிவித்தது , முதல்வரை மாற்றுவது ஆளுநரின் வேலை அல்ல என்றார் .
மேலும் இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என திமுக ஆளுநரிடம் முறையிட்டபோது , 18 உறுப்பினர்கள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக சொல்லவில்லை . முதல்வரை மாற்றவே கேட்டிருக்கிறார்கள் .எனவே தானே ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை .
ஆனால் சபாநாயகர் அரசுக்கு ஆதரவை திரும்ப பெற்றதாக கூறித்தான் தகுதிநீக்கம் செய்தார் .
ஆகையால் சபாநாயகரின் உத்தரவு செல்லாமல் போகவே வாய்ப்பு அதிகம் .
இதனை உணர்ந்துதான் தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமித்திருக்கிறது மத்திய தரப்பு . எப்படியும் தினகரன் பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கப்போவது இல்லை .
எனவே ஆட்சியை கலைத்துவிட்டு 6 மாத காலத்திற்கு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவந்து எடுக்கவேண்டிய நடவடிக்கைளை எடுத்து பாஜக கூட்டணியை உண்டாக்கி தேர்தலில் கணிசமான வெற்றியை பெறவே இந்த முயற்சி ....
பாமரன் கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக