செவ்வாய், 24 மே, 2016

உலகமயமாக்கலும் திருப்பூரும்.....


நாம் அனைவரும் உலகமயமாக்கல் என்றவுடன் என்ன நினைக்கிறோம் என்றால் அமெரிக்காவில் இருக்கும் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் வாழ்க்கை நோக்கு,சட்ட திட்டங்கள் இவைகளினால் ஏற்பட்ட பொருளாதார கொள்கைகள், அங்கு இருப்பது போலவே இங்கும் கடைகள் என அனைத்தும் நம் நாட்டிற்கு வருவதே உலகமயமாக்கல் என்று என்னிவருகின்றோம், இதற்க்கு நாம் மட்டும் காரணமல்ல நம் பாடத்திட்டங்கள் எழுத்தாளர்கள் எழுதும் விதம் பத்திரிகை செய்திகள் அனைத்துமே நம்மை இவ்வாறு சிந்திக்க தூண்டுகின்றன. 

ஆனால் உணமையான உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் என்பது பல்வேறு நாடுகள் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தின் விளைவாக எந்த பகுதியில் உற்பத்தியாகும் பொருள்களும் அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்க செய்வதே.

எந்த அமெரிக்காவை நாம் பின்பற்ற வேண்டும் என்று நினைகிறோமோ அந்த அமெரிக்காவில் இருக்கும் பாஸ்டன் பல்கலைகழகம் இந்திய வரைபடத்தில் திருப்பூரை தேடுகின்றது. ஏனென்றால் அத்தனை தொழில்நுட்பம்வாய்ந்த அமெரிக்காவை விட அதிகமான துணிவகைகள் உலகம் முழுவதுக்கும் இங்கிருந்து தான் அனுப்பபடுகின்றன. இதனாலேயே அவர்கள் திருப்பூரை ஆய்வு செய்ய விரும்பினார்கள்.

அதற்காக அவர்கள் PSG கல்லூரியை அணுகி, உங்கள் பகுதியில் திருப்பூர் என்ற ஊரில் இருந்து உலகம் முழுவதும் துணிவகைகள் சப்ளை செய்கிறார்களே அதைப்பற்றி ஆய்வு செய்துள்ளீர்களா என்று கேட்டார்கள். அவர்களோ இல்லை என்றும் நீங்கள் வந்தால் உதவி செய்வதாகவும் தெரிவித்தனர். [யார் நமது சிறப்பை ஆராய தயாராக இருக்கிறார்கள்]

இங்கு வந்து ஆய்வு செய்த அவர்களுக்கு ஒரு ஆச்சர்யம் திருப்பூரில் உள்ள மொத்த உற்பத்தியாளர்களில் 68% பேர் 8ம் வகுப்பிற்கு கீழே படித்தவர்கள், 6 முதல் 7 சதவீதம் பேரே டிகிரி முடித்தவர்கள். அத்தனை தொழில் நுட்பமும் படித்தவர்களும் இருந்தும் இந்த திருப்பூரை அமெரிக்காவால் மிஞ்ச முடியவில்லை. காரணம் இது நமது மண் சார்ந்து பரம்பரை பரம்பரையாக வளர்ந்து வந்த தொழில் ஆகையால் தான் இன்னமும் திருப்பூர் ஆடைகளுக்கு இன்னும் உலக நாடுகளில் வரவேற்பு உள்ளது.

கல்லூரிகளும் அரசியல் வல்லுனர்களும் பொருளாதார நிபுணர்களும் அமெரிக்கா போன்ற நாடுகளை ஆராயாமல் நம் நாட்டில் உள்ள தொழில் வளங்களையும் அதன் முன்னேற்றங்களையும் வருங்கால இளைய சமுதாயதிற்கு அளித்தால் நாம் உலக நாடுகளின் பின்னால் செல்லாமல் அவைகளை நம் பின்னால் வர செய்யலாம்.

ஸ்ரீ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக