திங்கள், 23 மே, 2016

ஜீவா - மறக்க முடியாத மனிதர்கள்


இன்று  நாம்  சந்திக்கும்  பல நண்பர்களின் பெயர்கள் ஜீவா. ஆனால் அவர்களுக்கு அந்த பெயருக்கான காரணமும் அந்த பெயருக்கு சொந்தக்காரரான தோழர் ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் ப.ஜீவானந்தம் பற்றியும்  தெரிந்திருக்குமோ தெரிந்திருக்காதோ தெரியவில்லை, இந்த பதிவின் மூலமாக நிச்சயம் அவர்களும் நாமும் தெரிந்துகொள்வோம்.

தமிழகத்தில் பொதுவுடமை கட்சியின் முக்கிய  தலைவராக விளங்கிய பொதுவுடமை போராளி தோழர் ஜீவா, பொது  வாழ்வில்  நாற்பது  வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைகளையும், சோதனைகளையும் தாங்கிய தியாகி. தன்னுடைய  ஆயுள் காலத்தில் பத்து  வருடங்கள் சிறையில் கழித்த இவர், காந்தியவாதியாக, சுயமரியாதை  இயக்க பற்றாளராக, பொதுவுடமை  இயக்க தலைவராக செயலாற்றியவர்.

ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் ப.ஜீவானந்தம்,
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ம் ஆண்டுகளுக்கு இதே நாளில் பட்டத்தார்–உமையம்மாள் தம்பதியினரின் மகனாக பிறந்தார். இயற்பெயர் சொரிமுத்து.

என்னதான் காமராஜரும் ஜீவாவும் அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தபோதும் மதிப்பு மிகுந்த நட்புடனையே இருவரும் இருந்தனர்.

ஒருமுறை காமராஜர் அவர்கள் ஒரு பள்ளிகூடத்தை திறந்துவைக்க சென்றார். அந்த பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் தோழர் ஜீவா என்பதை அறிந்த அவர் ஜீவாவையும் அழைத்து செல்லலாம் என்று எண்ணி ஜீவா அவர்கள் இருந்த குடிசைப்பகுதிக்கு சென்றார். அங்கு ஜீவாவை கண்டதும் நிகழ்ச்சி பற்றி கூறி பள்ளி திறப்பிற்கு வருமாறு அழைத்தார். உடனே ஜீவா அவர்கள் "நீ போடா காமராசு நான் பின்னாடியே வரேன்" என்று கூறினார். காமராஜரும் சென்றுவிட்டார். முதல்வர் காமராஜர் ஒருமணி நேரம் காத்திருந்தார். இதனை கண்ட கட்சிக்காரர் எதற்காக ஜீவாவிற்காக நீங்கள் காக்க வேண்டும் என்று கேட்ட பொழுது காமராஜர் அழகாக சொன்னார் "அந்த ஜீவா சுதந்திர போராட்டத்தில் ரத்தம் சிந்தியதால் தான் இன்று நான் முதல்வராக இருக்கிறேன்" என்றார்.

ஒருமணிநேரம் கழித்து ஜீவா வந்தார். அவரிடம் காமராஜர் அவர்கள் "ஏன்டா இவ்வளவு தாமதம்" என்று கேட்ட பொழுது ஜீவா "என்னிடம் இருந்த ஒரு வேட்டியை துவைத்து காய போட்டிருந்தேன். அதான் காய்ந்தவுடன் கட்டிக்கொண்டு வந்தேன் என்றார்.

அவ்வளவு பெரிய பொதுநலவாதி, முதல்வரின் நண்பர் அவரிடமே அன்று உடுத்திக்கொள்ள ஒரே ஒரு வேட்டி தான் இருந்துள்ளது என்றால் அவர் எப்படி தன வாழ்வை வாழ்ந்திருப்பார் என்று நினைத்துப்பாருங்கள். இன்றைய தலைமுறை தலைவர்கள் அவர்களின் வேட்டியை எந்த வீட்டில் எத்தனை வேட்டியை வைத்துவிட்டு வந்தார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் அதே நாட்டில் தான் தோழர் ஜீவாவை போன்ற நல்ல மனிதர்களும் வாழ்ந்துள்ளார்கள் என்பதே நிம்மதி.

ஜீவா என்னும் பெயராவது இன்று புழக்கத்தில் உள்ளது. இதுவே ஆறுதல்!!!!!!

ஸ்ரீ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக