திங்கள், 23 மே, 2016

ஸ்டாலினும் ஜெயலலிதா பதவியேற்பு விழாவும்



முன்னெப்போதும் நிகழாத அந்த நிகழ்வு இன்று நடந்திருக்கின்றது. முதவராக ஜெயலலிதா பதவியேற்கும் விழாவில் திமுக பொருளாளர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். தமிழக மக்களுக்கும் ஏன் அதிமுகவினருக்குமே இது ஆச்சர்யம் அளித்திருக்கும்.

மத்தியில் ஆட்சி செய்பவர்கள் எதிர்கட்சியினரின் விழாக்களில் கலந்துகொள்வதை நாம் பார்த்திருப்போம். இதுபோல தமிழக அரசியலில் நடைபெறாத என்றும் எண்ணியிருப்போம். முதல்படியாக முக ஸ்டாலின் அவர்கள் அதை செய்திருக்கின்றார். இது நிச்சயமாக வரவேற்க வேண்டியது.

ஸ்டாலினின் இந்த நிகழ்வு, அவரது நமக்கு நாமே பயணம், அவரது மேடை பேச்சு ஆகியன அவரது அரசியல் முதிர்ச்சியை காட்டுகின்றன. இது நிச்சயமாக அவரது அரசியல் பயணம் குறித்த இளைஞர்களின் பார்வையிலும் அரசியல் பார்வையாளர்களின் பார்வையிலும் பாமர மக்களின் பார்வையிலும் அவரது மதிப்பினை உயர்த்தும்.

இதோடு நின்றுவிடாமல் காவேரி பிரச்சனை போன்ற தமிழ்நாட்டின் பிரச்சனைகளுக்கு மத்திய அரசை நாடும் போதும் இந்த ஒற்றுமை நீடித்தால் இன்னும் சிறப்பு.

ஸ்ரீ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக