உச்சநீதிமன்றத்தில் ஜல்லிகட்டுக்கு தடைக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது . இந்த நிலையில் சென்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு இளைஞர்களும் பொதுமக்களும் மிகபெரிய அளவில் ஜல்லிகட்டிற்கு ஆதரவாக களத்தில் இறங்கினர் .
இந்த எழுச்சி தானாக கட்சி சாராமல் சென்னையில் தொடங்கி பிறகு தமிழகமெங்கும் பறந்துவிரிந்து சென்றது ...சில இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டும் சில இடங்களில் நடத்தப்பட்டது ..
இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் தன்னெழுச்சியை கண்ட அரசியல் கட்சியினர் மக்களோடு இணைந்து போரட்டத்தில் இணைந்தனர் . சில அரசியல் கட்சியினர் அவசர சட்டம் வேண்டும் எனவும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என சிலரும் பேசி வருகின்றனர் ..
இந்த நிலையில் சல்லிக்கட்டு நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வாதாடும் சு சுவாமி அவர்கள் தமிழகத்தில் தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தப்பட்டால் குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவந்து சட்டத்தை காப்பார்கள் என்றார் ..இதற்கு பல கண்டன குரல்கள் எழுந்தன ...
ஆனால் அப்படி குடியரசு தலைவர் ஆட்சியை நிறைவேற்ற முடியுமா ? என்ன நடக்கும் ?
உச்சநீதிமன்றம் தனது உத்தரவுக்கு ஒரு மாநில அரசு கட்டுப்பட மறுத்தால் கண்டணம் தெரிவித்து நடைமுறைப்படுத்த சொல்லும் .அதையும் மீறி நடத்தினால் மத்திய அரசிடம் சொல்லி தனது உத்தரவிணை தமிழகத்தில் நடைமுறை படுத்துமாறு கட்டளையிடும் ...இதில் கடைசி முயற்சியாக குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி சட்டம் ஒழுங்கினை பின்பற்ற செய்தல்.
கர்நாடகா உச்சநீதிமன்ற உத்தரவினை மதிக்கவில்லையே என நாம் வாதிடலாம் .ஆனால் பிரச்சனையின் தாக்கம் என்பது வேறு ..தண்ணீர் என்பது வாழ்வாதார பிரச்சனை . தனக்கே இல்லையென்று வாதிட்ட கர்நாடகா கூட பல கண்டன குரல்களை வாங்கிக்கட்டிக்கொண்டது . உச்சநீதிமன்றமும் கொஞ்சம் பொறுமைகாட்டியது காரணம் கர்நாடகாவில் இருந்த விவசாயிகளின் நிலையை கர்நாடக அரசு பயன்படுத்திக்கொண்டது .
இதேபோல சல்லிக்கட்டு பிரச்சனையிலும் நாம் மீறலாம் என்றால் ...உச்சநீதிமன்றம் அதை கண்டிப்பாக சட்டமீறலாக மட்டுமே எடுத்துக்கொள்ளும் ..இப்போது தமிழகத்தில் எழுந்துள்ள போரட்டத்தை கவனத்தில் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டிருந்ததாலும் நாம் அதன் உத்தரவுக்கு கட்டுப்படாத போது முதலில் கட்டுப்படுத்தவே முயலும் .
மேலும் ஏற்கனவே காளைகளை பட்டியலில் இருந்து நீக்கிய சட்டத்தினை செல்லாது என்று அறிவித்த நீதிமன்றம் மீண்டும் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்து அதையும் செல்லாது என்று அறிவித்தால் அது நிரந்தர தடையாக போய்விடும் ...
என்னதான் செய்வது என்றால் , நமது உணர்வுகளை இப்போதுபோலவே தொடர்ந்து மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்திற்க்கும் அமைதியான வழியில் காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் ...அதேநேரத்தில் சட்டத்தினை மதித்து உச்சநீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும்வரை பொறுமை காத்திட வேண்டும் ...நாம் உச்சநீதிமன்றத்தை மதித்தால் நமது வாதத்திற்கு அவையில் மதிப்பு இருக்கும் ..ஒருவேளை நாம் தடையை மீறி செயல்பட்டால் வாதிடுவது கூட கஷ்டமாக போகலாம் .
பொதுமேடையில் விதண்டாவாதம் பேசும் எவரும் உச்சநீதிமன்றத்தில் அப்படி பேச முடியாது ....
ஜல்லிகட்டில்லாத இந்த பொங்கல் இனிக்காது ...இருந்தாலும் நமது பொறுமையும் போராட்டமும் சட்டத்தை மதித்தலும் நமக்கு வெற்றியை பெற்றுத்தரும் ...
நல்ல உத்தரவு வரும்வரை காத்திருப்போம் ....ஒருவேளை நடத்தவே
கூடாது என்றால் நமது போரட்டத்தை வலுப்படுத்தலாம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக