அலங்கநல்லூரில் இளைஞர்களும் பெண்களும் ஜல்லிக்கட்டுக்காக உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர் .போலீசார் வன்முறையை கட்டவிழ்த்தும் போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராடிக்கொண்டிருக்கிறார்கள் ..
ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்று வீரவசனம் பேசிய தமிழக முதல்வர் பன்னிர்செல்வம் அவர்களுக்கு கீழே இயங்கக்கூடிய காவல்துறை அங்கு மக்களை ஒடுக்கி வருகின்றது ...ஏன் இந்த இரட்டை நிலை என்று தெரியவில்லை .
அலங்காநல்லூர் போராட்டம் இன்று சென்னையிலும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றது .இது தமிழகம் முழுவதும் பரவிட அதிக வாய்ப்புள்ளது ....உடனடியாக தமிழக அரசு போராடும் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் ...
வெளியூர்களில் இருந்து பெரும்பலான இளைஞர்களும் பெண்களும் போராட்ட களத்தில் இருப்பதால் போதிய அடிப்படை வசதிகளை செய்திடல் வேண்டும் ...
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA MP என யாருமே (கருணாஸ் தவிர ) ஒருவரும் போராட்ட களத்திற்கு சென்று ஆதரவளிக்கவில்லை ..ஆளும்கட்சிதான் சட்டத்தை மதிக்கவேண்டும் என்கிற கட்டாயத்திற்காக இருந்தால் எதிர்க்கட்சியான திமுகவும் இப்படி இருப்பது ஏனோ ?
மக்களின் குரலாகவே மாநில அரசு இருக்கவேண்டும் ...சட்டத்தை மதித்து நடக்கவேண்டும் தவறில்லை ..ஆனால் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள் தடை விதித்தவர்களா இல்லை மத்திய அரசா ? இருவருமே இல்லை மாநில அரசுக்கு தான் முழு பொறுப்பு .
மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவும் தருவாயில் அதனை தவிர்க்க மாநில அரசுக்கு உரிமை உண்டு .அதற்காக உச்சநீதிமன்றத்தின் தடையையும் மீறலாம் ...அரசு தேர்ந்த வழக்கறிஞர்களுடன் பேசி எப்படி சட்டசிக்கல் இல்லாமல் ஜல்லிகட்டிற்கு அனுமதி அளிக்கலாம் என்று பரிசீலனை செய்யவேண்டும் ...
ஸ்ரீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக