மதப்பிரச்சாரங்களை வெளிநாட்டு நிதியுதவியுடன் பல தொண்டுநிறுவனங்கள் நடத்திடுவது ஏன் தெரியுமா ?
ஏழைகளாகிய உங்களின் தாழ்ந்த நிலைக்கு நாங்கள் ( ஏழைகளின் உழைப்பை சுரண்டிடும்
முதலாளிகள் ) காரணமல்ல நீங்கள் முற்பிறப்பில் செய்த கர்ம காரியங்களின் பலனே என்கிற தவறான கருத்தை அவர்களிடத்தில் திணிக்கவே ....
இதனால் என்ன பலன் அவர்களுக்கு ?
தாழ்ந்த நிலையில் உள்ள மக்கள் சிந்தித்து தங்களுடைய நிலைக்கு காரணம் முதலாளித்துவம் தான் என்பதனை அறிந்துகொண்டு அவர்களுக்கு எதிராக போராடிவிட கூடாது என்பதற்காகவும் தங்களுடைய நிலைக்கு தாங்களே தான் காரணம் என்பதனை இறைவனின் பெயரை சொல்லி திணிக்கவே தொண்டுநிறுவனங்கள் நடத்திடும் மத நிகழ்வுகளும் பிரச்சாரங்களும் ...
செலவெல்லாம் செய்கிறார்களே ?
ஆமாம் முன்பைவிட இப்போது அதிகமாகவே செலவு செய்கிறார்கள் ..காரணம் இப்போது அதிகரித்துள்ள கல்வியறிவினால் ஏற்பட்டுள்ள விளிப்புணர்வை தகர்க்க அதிகபடியான தொகையினை செலவு செய்ய வேண்டிதான் உள்ளது ..
முதலாளிகள் முதலாளிகளாகவே இருக்கவும் ஏழை மக்களை இறைவனின் பின்னால் ஓடச்செய்து அவர்களின் நிலைக்கு முதலாளி வர்க்கம் காரணமல்ல என்பதை மக்களிடத்தில அதிகபடியாக நிறுவுவதற்கும் இன்னும் கூட செலவு செய்வார்கள் ..
படிக்க உதவுவார்கள் பகுத்தறிவாக சிந்திக்க விட மாட்டார்கள் ...
பள்ளிகள் நடத்துவார்கள் உண்மைகளை நடத்திட மாட்டார்கள்
இருதய அறுவைசிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிடுவார்கள் ..பிழைத்து என் நிலைக்கு காரணம் நான் செய்த பாவங்கள் தான் முதலாளித்துவம் அல்ல என சொல்வதற்காக ...
அனைத்திற்கு பின்னாலும் ஒரு காரணம் இருகின்றது மக்களே ! இலவசமாகவும் இறைவனின் பெயராலும் எவன் எதை செய்தாலும் அங்கு மக்களின் மனதினை மாற்றி ஏமாற்றிட செயல் நடப்பதாக கருதுங்கள் ...
நன்றி
பாமரன் கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக