அண்மையில் தி இந்து நாளிதழில் வெளியான புகைப்படம் ஒன்றினை கண்ட பிறகு காஷ்மீரில் இந்திய அரசு வீழ்ச்சி அடைகிறதோ என்கிற எண்ணம் என் மனதில் உருவாகியுள்ளது.
இதுவரை காஷ்மீரில் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்துவார்கள் அவர்களை நமது ராணுவ வீரர்கள் கட்டுப்படுத்துவார்கள். பல நேரங்களில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் உள்நுழைந்து நமது பகுதிகளை கைப்பற்றுவார்கள் உடனடியாக நமது ராணுவம் சென்று அவர்களை தாக்கி ஒடுக்கும், இதுவே நாம் இதுவரை காஷ்மீரில் கொண்டுவந்திருந்த போராட்டங்களும் முடிவுகளும்.
ஆனால் இன்று காஷ்மீரில் ரோட்டில் இறங்கி போராடுவது பிரிவினைவாதிகளை போன்று தெரியவில்லை குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அவர்கள் அனைவரும் மாணவர்கள். தி இந்துவில் வெளியான அந்த புகைப்படத்தில் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு படை வாகனத்தை உதைக்கின்றனர். இது ஏதோ போராட்டத்தில் விளைந்த கோவத்தினால் அவர்கள் இப்படி செய்வதாக எண்ணிவிட முடியாது.
இத்தகைய போராட்டங்களை காணும்போது இந்திய அரசு காஷ்மீர் நிலப்பரப்பை மட்டும் வென்று இருக்கிறதே தவிர அந்த பகுதி மக்களின் நெஞ்சங்களை வெல்லவும் அவர்களுக்கு இந்திய அரசின் மீதுள்ள நம்பிக்கையை கூட்டவும் தவறிவிட்டது. முன்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகள் நடைபெறும்போது நமது ராணுவத்திற்கு முதலில் தகவல் தெரிவிப்பவர்கள் காஷ்மீர் மக்களே ஆனால் இன்றைய சூழ்நிலையில் அவர்களே ரோட்டில் இறங்கி போராடும் நிலைக்கு வந்துவிட்டனர். இனி அவர்கள் நமக்கு ஒத்துழைப்பு அளிப்பார்களா என்று தெரியவில்லை.
எதனால் இந்த வீழ்ச்சி :
குறிப்பாக இந்திய அரசின் கட்டுப்பாட்டிலும் கூட அவர்கள் இன்னமும் முழு சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
அரசியல் காரணங்கள் .
பெல்லட் குண்டுகளின் தாக்கத்தினால் பல மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மனித கேடயமாக பொது மனிதனை பயன்படுத்தியது.
மாணவர்களை தாக்கியது.
என்ன செய்ய வேண்டும் :
காஷ்மீர் நிலப்பரப்பை நாம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி அதற்காக செலவு செய்கிறோமோ அதனை விட அதிகமாக அந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றிட செலவு செய்ய முன்வரவேண்டும். மேலும் அவர்களின் நன்மதிப்பினை பெறுமாறு நமது ராணுவம் செயல்பட வேண்டும் .
மக்களின் மனதினை வென்றால் காஷ்மீர் ஒரு பிரச்சனையே அல்ல...
நன்றி
பாமரன் கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக