புதன், 19 ஏப்ரல், 2017

மும்முறை தலாக் - தடை செய்யப்பட வேண்டுமா ?என்ன முடிவு இந்தியாவுக்கு நல்லது ?

தற்போதய காலகட்டத்தில் மும்முறை தலாக் குறித்த விவாதங்கள் பரவலாக நடைபெற்றுவருகின்றன . இஸ்லாம் மார்க்கம் தனக்கென சில விதிகளை உருவாக்கி வைத்துள்ளது .
ஆண்கள் பெண்களை விவகாரத்து செய்ய மும்முறை தலாக் சொன்னால் போதுமானது . அதேபோல பெண்களால் ஆண்களுக்கு கொடுக்கப்படுவதற்கு குலா (khula ) என்று பெயர் .



இதுவரை மிகபெரிய பிரச்சனைகளை கொண்டிருக்காத இந்த தலாக் முறைக்கு தற்போது பல முனைகளில் இருந்தும் கண்டன குரல்கள் ஒலித்துவருகின்றன . இதற்கு முக்கிய காரணம் தொலைபேசி வாயிலாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் மூன்றுமுறை தலாக் சொல்லி சில நிமிடங்களில் விவகாரத்து செய்து வருகின்றனர் என்பதே .
இதனால் மிகபெரிய அளவில் பாதிக்கப்படுவது பெண்களே . பெரும்பாலான பெண்களுக்கு தாங்கள் எதற்க்காக விவாகரத்து செய்யப்பட்டோம் என்பதனை கூட அறிய வாய்ப்புகள் குறைவு . 

இதனால் பாதிப்படைந்த முசுலீம் பெண் ஒருவரே பிரதமரை இந்த விசயத்தில் தலையிட்டு பெண்களை காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்  . இதுகுறித்து விரைவில் சிறந்த முடிவு கிடைக்கும் என பிரதமரும் அந்த பெண்ணுக்கு உறுதி அளித்துள்ளார் .

முறைப்படி தலாக்எப்படி சொல்லப்பட வேண்டும்...

தலாக் முறைக்குறித்து முசுலீம் நண்பர்களிடத்தில் பேசியபொழுது , குறுஞ்செய்திகள் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் கொடுக்கும் முறையே இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை . மேலும் ஒவ்வொரு  குறிப்பிட்ட இடைவெளி காலத்திற்கு பிறகு தான் அடுத்தடுத்த தலாக் சொல்லப்படவேண்டும் . அவ்வாறு சொல்வதற்கு முன்பாக பெரியவர்களிடத்தில் முறையாக அறிவித்துவிட்டு தான் சொல்லப்படவேண்டும் என்பதே விதி .
ஆனால் தற்போது சிலர் இதனை தவறாக பயன்படுத்தி விவகாரத்து கொடுத்துவிடுகின்றனர் . அந்த சிலரால் அந்த விதியே தற்போது கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றது .

என்ன செய்யலாம் :

இந்தியாவின் சிறப்பே இங்குள்ள பல மதத்தவர்களும் அவர்களின் மத நம்பிக்கைகளின்படியும் விதிகளின்படியும் வாழ்ந்துகொள்ளலாம் . அதற்கு சட்டரீதியான அனுமதியும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது .
ஒரு மதத்தில் தவறாக கோட்பாடுகளை பின்பற்றி இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும்பொழுது அதனால் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது அதனை முதலில் தடுக்கவேண்டிய பொறுப்பு அந்த மதத்தின் பெரியவர்களுக்கு தான் உண்டு .
குறிப்பாக இசுலாம் மதத்திற்கு அந்ததந்த தர்காவிலும் அந்ததந்த பகுதிகளிலுமே மத பெரியோர்கள் இருப்பது வழக்கம் . அவர்கள் தான் இளம்தலைமுறையினர் தவறாக பயன்படுத்துவதை நிறுத்திட அறிவுரைகள் வழங்கிட வேண்டும் .
தற்போதைய அரசாங்கம் இதையெல்லாம் காரணமாக கொண்டு பொது சிவில் சட்டத்தை புகுத்த நினைக்காமல் , மத தலைவர்களுக்கு அறிவுறுத்தி விதிகளை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும் . யாரேனும் விதிகளின்படி தலாக் பயன்படுத்தாமல் இருந்தால் அதனை கண்காணித்து அந்த விவகாரத்து செல்லாது என அறிவித்து அந்த நபருக்கு அறிவுரையுடன் தண்டணை வழங்குதல் வேண்டும் ..
நன்றி
பாமரன் கருத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக