திங்கள், 17 ஏப்ரல், 2017

எரிக்கின்ற வெயிலில் ஏழை சிறுமி !

வெற்று காலில்
எரிகிற வெயிலில்
தலைக்கு மறைவின்றி

வாடாத வெள்ளரிக்கு 
திரை மறைவு போட்டாள்
வாடிய சிறுமி ஒருத்தி

காரணம் கேட்டேன் ...

முகத்தை துடைத்துக்கொண்டு
காய்ந்த உதடுகளை
கஷ்டப்படுத்தி புன்னகை செய்தால்

புரிந்தது அவள் சொல்லாமலே ..

வாங்கும் நீங்கள்
வாடிய ஏழையை விட
வாடாத வெள்ளரிக்குத்தானே
முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று ...

எத்தனை எத்தனை
தொழில் முனைவோர்கள்
சாலை ஓரங்களில் 
வயது வித்தியாசம் பாராமல் ...

இந்த கொடும் வெயில்
அறைக்குள் வேலை பார்த்த
நமக்குத்தான் கொடும் வெயில்
அந்த சிறுமியை பொறுத்தவரையில் ...

வருபகவான் ஏமாற்றி அணைத்திட்ட
ஏழையவளின் சிறு அடுப்பிணை
வெள்ளரிவிற்று  எரிய வைக்கவே
சூரியபகவானின் இந்த கொடும் வெயில் !

ஸ்ரீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக