செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அதிமுக இணைவு எழுதிவைக்கப்பட்டு நடத்தப்படும் நாடகமோ ?

விஜயபாஸ்கர் வீடுகளில் வருமான வரித்துரை சோதனை

முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் பறிமுதல்

விஜயபாஸ்கரை கைது செய்யாமலே பல முறை விசாரனைக்கு அழைத்தமை

தினகரன் 60 கோடி ரூபாய்க்கு சின்னத்தை மீட்க பேரம்பேசியதாகவும் 1 .3 கோடியுடன் ஒருவர் டெல்லியில் கைது

திடீரென கட்சியை இணைக்க பச்சை கொடி காட்டிய பன்னிர்செல்வம்

பன்னிர்செல்வம் எது சொன்னாலும் வரிந்துகட்டிக்கொண்டு திட்டிய அமைச்சர்கள் குறிப்பாக தம்பிதுரை திடீரென பன்னிர்செல்வம் பேச்சினை வரவேற்று பேசியது .

பன்னிர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்காதபோதும் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றுகூடியது .

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு அமைச்சர் ஜெயகுமார் " சசிகலா தினகரனின் குடும்ப தலையீட்டை தொண்டர்கள் விரும்பாததால் அதிமுகவில் இருந்து அவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு பன்னிர்செல்வத்தை கட்சியில் இணைக்க அமைச்சர்கள் விரும்புவதாக தெரிவித்தது "

இவை அனைத்தையும் பார்க்கும்போது ஏதோ திரைக்கதை எழுதிவைத்துவிட்டு நடத்தப்படும் நாடகம் போன்று தோன்றுகிறது .

உங்களுக்கு ?

இதுதான் அரசியல் மக்களே !

நன்றி
பாமரன் கருத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக