வெள்ளி, 26 மே, 2017

மாடா ? நாடா ? - எது முக்கியம் ....


நேற்று மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் இறைச்சிக்காக மாடு காளை ஒட்டகம் எருமை முதலிய விலங்கினங்களை விற்க கூடாது எனவும் அவைகளை  விற்பதற்கான வழிமுறைகளையும் வளர்ப்பதற்கான வழிமுறைகளையும் அறிவித்து உள்ளனர் .



உயிரினம் கொல்லப்பட கூடாது காக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை . வாயில்லா ஜீவன் என்றாலும் வாழ்வதற்கான உரிமை அவைகளுக்கும் உண்டு .

எதிர்க்க காரணம் : 

அரசு தற்போது கொண்டுவந்துள்ள தடை யாருக்கு எதிரானது என்பதை பார்க்கவேண்டுமானால் மேற்குறிப்பிட்ட கால்நடைகளை யார் உணவாக பாரம்பரிய நிகழ்வுகளுக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டாக வேண்டும் .



ஒட்டகம் வெட்டுவது என்பது பக்ரீத் பண்டிகையின் போது முசுலீம் மக்களின் மத நடவடிக்கை

கேரளாவில் எருமைகள் வெட்டப்படுகின்றன திருவிழாக்களில்

இதைத்தவிர மாட்டுக்கறியை உண்பவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்

இந்த தடை என்பது இவர்களின் பாரம்பரியத்தையும் பழக்கவழக்கத்தையும் மாற்றி வேறெந்த பழக்கவழக்களையோ திணிக்க நினைக்கும் முயற்சியே .

அரசுக்கு கேள்வி : 

மாடுகளுக்கு எந்த அடிபடையில் தடை விதித்திர்கள் ?

உயிரினம் என்கிற அடிப்படையில் என்றால் ஆடுகளையும் கோழிகளையும் விட்டுவைத்தது ஏன் ?

அவை உணவுக்காக வளர்க்கப்படுகின்றன என்பது உங்கள் பதிலாக இருந்தால் வளர்த்து உணவுக்கு பயண்படுத்தி கொள்ளலாமா ?

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீங்கள் தடை செய்த உணவினை உண்பது இல்லை . ஏற்றுமதிக்காக மட்டுமே அவ்வளவும் விற்கப்பட்டன . ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தாலே மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட்டிருக்குமே ?

பன்முக தன்மையை ஆதரிக்கவேண்டிய இந்தியா இப்படி செய்யலாமா ?

ஒரு பதிவுதான் நினைவுக்கு வருகின்றது ,

இன்று மாட்டுக்கறிக்கு தடை 
நாளை கோழி கறிக்கு தடை 

பிறகு 

தயிர் சாதம் தேசிய உணவாக 
அறிவிக்கப்படுதல் 

கொடுமை 

இந்தியா ஒருமைப்பாடை இழந்துகொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் இந்த தடை .

இது சிறிய முயற்சிதான் மக்களே ....விழித்துக்கொள்ளுங்கள்

நன்றி
பாமரன் கருத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக