புதன், 24 மே, 2017

இந்தியா பாகிஸ்தான் உரசல் : எப்போது முடியும் ....


சுதந்திரதிற்கு முன்புவரை இரண்டு தேசங்களும்  ஒற்றுமையொடு தான் இருந்தன . சுதந்திரத்திற்கு பிறகு பிரச்சனைகள் ஏற்பட்டுவிட  கூடாது அனைத்து மதத்தினருக்கும் சம வாய்ப்புகள் கொடுக்கப்பட வெண்டும் என்பதாலேயே கடினமான பிரிவினை முடிவு எடுக்கப்பட்டது . ஆனால் இன்றுவரை சொத்து பிரித்த பின்பு அண்ணண் தம்பிக்குள் வரும் சண்டை போல சண்டையிட்டுக்கொண்டே இருக்கின்றோம் .



யாருக்கு பொறுப்பில்லை :

இரண்டு நாட்டு மக்களுக்குமே சண்டையிட்டுக்கொள்வதில் மகிழ்ச்சியில்லை . ஆனால் ஆட்சியாளர்களுக்கு இருக்குமோ என்கிற சந்தேகம் அவ்வப்போது வருகின்றது . இரண்டு நாட்டு ஆட்சியாளர்களும் இதில் அடங்குவர் .

சுதந்திர இந்தியாவின் பல பகுதிகளை ஒருங்கிணைத்த இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தேசத்தில் காஷ்மீர் எல்லைப்பிரச்சனையை முடிக்கக்கூடிய தலைவர்கள் பிறக்கவில்லையா என்ன ? பிறந்திருக்கிறார்கள் .ஆனால் முயலவில்லை .

மேற்குலக நாடுகளின் தலையீடு  முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது . காரணம் நம் இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் சண்டையில் ஆயுத விற்பனை செய்து கொழுத்து திரிவது அவர்கள் தான் .
ஆகவே அவர்கள் கூட பிரச்சனை இன்னும் நீள காரணமாக இருக்கலாம் .

பேச்சுகளில் பொறுப்பு வேண்டும் : 

நமது நாட்டு ராணுவ வீரரோ அந்த நாட்டு ராணுவ வீரரோ இன்னுயிர் துறந்திடும் போது மக்களிடம் இயல்பாகவே கோபம் வெளிப்படத்தான் செய்யும் . ஆனால் அதனை காரணமாக வைத்துகொண்டு தங்கள் எண்ணத்தை  ஆட்சியாளர்கள் செயற்படுத்த முயல கூடாது .

ஒரு பிரச்சனை ஏற்படும்பொழுது பொறுப்பில் இருப்பவர்கள் கவனமாக பிற்கால பேச்சுவார்த்தையை மனதில் வைத்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் .

பேச்சுகளே பிரச்சனைகளின் வாயில் என்பதை உணர வேண்டும் இருநாட்டு தலைவர்களும் .

பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு : 

நாம் எளிமையாக சொல்லிவிடுவது பாகிஸ்தான் நம்மைவிட சிறிய நாடுதானே அடித்து நொறுக்கிவிடலாமே என்று .

காலம் மாறிவிட்டது நண்பர்களே இரண்டு நாடுகளுமே அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் . போரென்று வந்தால் இரண்டு நாடுகளும் வரலாறு காணாத அழிவை சந்திக்கும் . இதில் இறக்கப்போவது அப்பாவி மக்களும் ராணுவ வீரர்களும் தான் . அதிகார வர்க்கத்தினர் கிடையாது .

ஆட்சியளர்களுக்கு அழுத்தம் கொடுங்கள் : 

இரண்டு நாட்டு மக்களும் செய்யவேண்டியது பேச்சுவார்த்தை நடத்திடுங்கள் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திடுங்கள் என ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதே .

பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கதில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் .

சூழ்ச்சிகளை வென்று பேச்சுவார்த்தை நடத்திடுங்கள் .

நன்றி
பாமரன் கருத்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக