சனி, 2 செப்டம்பர், 2017

அனிதா - செய்திருக்க வேண்டியது , பிற மாணவர்கள் இனி செய்திட வேண்டியது

கடவுளை விடவும் புனிதமானது மருத்துவர் பணி . ஒருவர் மருத்துவர் ஆகிறார் என்றால் அவருக்கு மட்டும் அது பெருமை அல்ல அந்த குடும்பத்திற்கு அந்த ஊருக்கு என அனைவருக்குமே அது பெருமைதான் .

அதுவும் ஒழுகும் ஓலை குடிசையில் ஏழை மகளாய் பிறந்த தன்னால் அந்த பெருமை கிடைக்க வேண்டும் என உயிரை கொடுத்து படித்து போதுமான மதிப்பெண் வாங்கிவிட்ட பெண்ணிடம் ஒரு சட்டத்தை நீட்டி உன்னால் மருத்துவம் படிக்க முடியாது என்று ஆட்சியாளர்களும் நீதிமன்றமும் சொல்லியபோது அவருக்கு எப்படி இருந்திருக்கும் .

கண் விழித்து படித்து  , உயிரை கொடுத்து படித்து  , சுய விருப்பங்களை ஒதுக்கிவிட்டு படித்து வாங்கிய மதிப்பெண் வெறும் காகிதமே  என ஊர் உரைத்தபோது என்னவாகி துடித்திருக்கும் அந்த உயிர் ...மாண்டுபோனால் அனிதா .

அவர் மாண்டிருக்கக்கூடாது , எந்த பாழாய்போனவர்கள் மருத்துவம் படிக்க தன்னை அனுமதிக்கவில்லையோ அவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்திருக்க வேண்டும் ...IAS படித்து அந்த துறைக்கே செயலராக வரும் அளவுக்கு உயர்ந்திருக்க வேண்டும் .

நிச்சியம் அது அவரால் முடிந்திருக்கும் . நமக்கே அவர் மீது நம்பிக்கை இருக்கும்போது அவரால் நிச்சயம் முடிந்திருக்கும் . ஆனால் காலமும் சூழ்நிலையும் அவரை நம்மிடம் இருந்து பிரித்துவிட்டது .

அவருக்காக வருந்தி கண்ணீர்துளிகளை சிந்துகின்ற இந்த நேரத்தில் பிற பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் நாம் சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்வது , உங்களுக்காக பல உயர்ந்த படிப்புகள்  , வேலை இடங்கள் , அதிகார பீடங்கள் காத்திருக்கின்றன .

அந்த இடங்களை நோக்கி வெறித்தனமாக முன்னேறுங்கள் . உங்களுக்கு தடுக்கப்பட்ட வாய்ப்பினை மற்றவர்களுக்கு கிடைக்க செய்யும் அதிகார மேடைக்கு உங்களை இட்டு செல்லுங்கள் .

தற்கொலை தீர்வல்ல ...

பாமரன் கருத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக