இன்று மாலை பிரபல செய்தி சேனலில் வீணாகும் இயற்கை பொருள்களைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம் தொடர்பான சந்தேகங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு விளக்கிக்கொண்டு இருந்தனர் .
எலுமிச்சையும் வேப்பமரம் சார்ந்த பொருள்களை மட்டும் போடக்கூடாது என விளக்கம் சொன்னனர் .
திடீரென்று துரித செய்தியாக H ராஜா அவர்கள் சாரண சாரணியர் தேர்தலில் தோற்றுவிட்டதாக செய்தி ஒளிபரப்பானது .
தேர்தல் முடிவுகளை சொன்ன தேர்தல் அதிகாரி திலகவதி உண்மையை சொன்னார் , ஆம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தமுறை சாரண சாரணியர் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த ஊடகங்களுக்கு நன்றி என்றார் .
அவர் சொன்னது முற்றிலும் உண்மை , இந்தமுறை முக்கியத்துவம் அளித்ததற்கு காரணம் H ராஜா என்றொருவர் போட்டியிட்டதே காரணம் .
இதற்கு மட்டுமல்ல , அதிமுக அணிகளில் யார் பேசினாலும் அது துரித செய்தியாகிவிடுகின்றது . அதிமுக அணிகளுக்குள் நடப்பதை ஊடகங்கள் தங்களுக்கு இரையாக்கிக்கொண்டு வாழ்ந்து வருகின்றன என்பதே உண்மை .
மக்களுக்கு அவசியமானதை சொல்லும் கடமை ஊடகங்களுக்கு இருக்கின்றது ...அதை ஊடகங்கள் உணரவேண்டும் .
பாமரன் கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக