புதன், 20 செப்டம்பர், 2017

திரு கருணாநிதி அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்

கருணாநிதியின் தமிழ் சேவைக்கும் அரசியல் பணிக்கும் இந்தியாவின் மிக மூத்த மற்றும் அதிக அனுபவத்திற்கும் தலைவணங்குகிறோம் .

சில மாதங்களுக்கு  முன்பாக தமிழக சட்டபேரவையில் மசோதா ஒன்று தாக்களானது அதன்படி கருணாநிதியின் உடல்நலனை கருத்தில்கொண்டு அவருக்கு சட்டமன்றத்திற்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க தாக்கல் செய்யப்பட்டது , நிறைவேறவும் செய்தது .

கருணாநிதி அவர்களின் அரசியல் ஆளுமை மற்றும் அவரின் அனுபவம் ஆகியவற்றை  கருத்தில்கொண்டு நோக்கினால் இந்த மசோதா ஒரு பொருட்டே அல்ல .ஆனால் தொடர் உழைப்பினால் உடல்நலன் பாதிக்கப்பட்டு இனி முன்பு போல செயல்பட முடியாது என தெரிந்துவிட்ட பின்னரும் திமுகவின் தலைவர் , சட்டமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளை சுமையாக கொண்டிருப்பது பிற்கால தலைமுறைக்கு தவறான முன் உதாரணமாக ஆகிவிடும் .

சிறந்த தலைமை , தனக்கு பின்னுள்ள தலைமுறைகளை தட்டிக்கொடுத்து அவர்களை வழிநடத்துவதே , இதை கருணாநிதி அவர்களுக்கு சொல்லுகின்ற தகுதி எனக்கு இருப்பதாக நினைக்கவில்லை . ஆனால் அவர் அவ்வாறு நடந்துகொள்ளாத நிலையில் சொல்லித்தான் ஆகவேண்டும் .

கருணாநிதி அவர்களே உங்களை முன்னுதாரணமாக கொண்டவர்களுக்கு நீங்கள் நல்ல முன்னுதாரணமாக இருந்திடவேண்டும் என்பதே ஆசை .

பாமரன் கருத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக