தினகரன் பேசினால் பிரேகிங் , குடகு ரெசார்ட்டில் தங்க தமிழ் செல்வன் பேசினால் பிரேகிங் , ஆளுநர் பேசினால் பிரேகிங் , ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தால் பிரேகிங் என அனைத்துமே இன்று பிரேகிங் ஆகிவிட்டது ..
யார் முதலில் சொல்வது என்பதுதான் இப்பொதெல்லாம் முக்கியமாக போய்விட்டது ....முக்கியமான விசயங்களை சொல்வதெல்லாம் இப்போது முக்கியமற்றதாக ஆகிவிட்டது .விளைவு எந்த சேனலை திருப்பினாலும் ஒரே செய்தி நேரலையில் ஓடிக்கொண்டிருக்கும் .
முன்பெல்லாம் முக்கியமான செய்திகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டு இருப்பார்கள் . அதனால் மக்களும் விளிப்புணர்வு அடைந்தார்கள் . ஆனால் இன்றைய செய்திகள் பேருந்தைப்போல ஆகிவிட்டது . ஒவ்வொரு நொடிக்கும் செய்திகள் மாறுகின்றன .
வேகம் முக்கியம் தான் அதற்காக முக்கியதுவத்தை இழந்துவிட கூடாது .
பாமரன் கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக