நான் இப்போது பேசியே ஆகவேண்டும் ( I need to speak up now) என்கிற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தலையங்கம் ஒன்றினை எழுதியுள்ளார் யஸ்வந்த் சின்கா. இவர் பாஜகவின் மிக மூத்த தலைவர், முன்னாள் நிதியமைச்சர். அவரின் எழுத்துக்களை தமிழில் பார்ப்போம்.
இப்போது குழைந்து போயிருக்கும் இந்திய பொருளாதாரம் குறித்து பேசவில்லையெனில் நான் எனது தேசிய கடமையை செய்யாதவனாக ஆகிவிடுவேன். நான் இப்போது சொல்லப்போகிற விஷயங்கள் அனைத்தும் பெரும்பாலான பாஜகவின் உறுப்பினர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் பேச தயங்குகிறார்கள் பயத்தின் காரணமாக.
அருண் ஜெட்லி மிக சிறந்தவராகவும் புத்திசாலியாகவும் நினைக்கப்பட்டிருக்கிறார் இந்த ஆட்சியில். தேர்தலுக்கு முன்பாகவே அவர்தான் அடுத்த ஆட்சியின் நிதியமைச்சராக நியமிக்கப்படுவார் என கணிக்கப்பட்டது. ஆனாலும் 2014 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை . பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில் பார்க்கப்பட்ட அருண் ஜெட்ல்லிக்கு மக்களால் வெற்றி கிடைத்திடவில்லை. ஆனாலும் அவர் நிதியமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
இதே மாதிரியான சூழ்நிலை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் வந்தது. மிகப்பெரிய தலைவர்களும் அவரது நெருக்கமான சகாக்களுமாக இருந்த ஜஸ்வந்த் சிங் மற்றும் பிரமோட் மகாஜன் தேர்தலில் தோற்றவுடன் அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வாஜ்பாய் மறுத்துவிட்டார்.
மேலும் மிகச்சிறப்பாக ஒரு நிதியமைச்சர் செயல்படவேண்டுமென்றால் அவர் 24/7 க்கு மேல் வேலை செய்யவேண்டி இருக்கும். சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட அருண் ஜெட்லி யால் அவரது பதவிக்கு நியாயம் செய்யவில்லை.
இதுவரை எந்த நிதியமைச்சருக்கும் இல்லாத நல்ல விஷயம் அருண் ஜெட்லி க்கு நடந்தது. ஆம் கச்சா எண்ணெய் விலை குறைவினால் லட்சக்கணக்கான கோடிகள் கிடைத்தன. ஆனால் அதனை முறையாக பயன்படுத்திடவில்லை.
இன்று இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கின்றது ? கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது தொழிற்சாலை உற்பத்திக்கான அனைத்தும் இருக்கின்றது ஆனாலும் சரிவை சந்தித்துள்ளது. விவசாயம் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. கட்டுமான தொழில் உற்சாகத்தை இழந்துள்ளது.ஏற்றுமதி நலிவடைந்துவிட்டது. பணமதிப்பிழப்பு மிக தெளிவாக பொருளாதார வீழ்ச்சியை காட்டிவிட்டது. GST யால் மிகப்பெரும் அளவிற்கு தொழிளார்கள் வேலை இழந்துள்ளனர்.
மேலும் இன்றைய நிலவரப்படி பொருளாதார வளர்ச்சி 5.7% ஆக இருக்கின்றது.கடந்த மூன்றாண்டுகளில் மிக குறைவான வளர்ச்சி இது. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பொருளாதார வளர்ச்சியை கணக்கெடுக்க புதிய முறையை மத்திய அரசு புகுத்தியது. அதன்படியே இந்த 5.7% வளர்ச்சி. பழைய முறைப்படி கணக்கிட்டால் இது 3.7% க்கும் குறைவாக இருக்கும்.
இது குறித்து பிரதமர் அவர்கள் கவலை அடைந்துள்ளார். இதனால் அவர் நிதித்துறை சார்ந்தவர்களுடனான சந்திப்பை ஒத்திப்போட்டுள்ளார்.நிதியமைச்சர் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க திட்டம் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்காக நாம் காத்திருக்கிறோம், இன்னும் வந்தபாடில்லை.
பிரதமர் செய்திருக்க கூடிய ஒரே முன்னேற்றம் என பார்த்தால் பொருளாதார ஆலோசனை குழுவினை அமைதிருப்பது. அந்த பஞ்ச பாண்டவர்கள் இந்த மகாபாரத போரில் வெற்றிபெறவேண்டும் நமக்காக.
பருவமழை பொய்த்ததினால் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அது ஒரு பைசா முதல் ஆரம்பித்தது சில மாநிலங்களில். சில பெரும் வணிக நிறுவனங்கள் திவாலடைந்து அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டன. மேலும் பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன. GST மூலமாக வசூல் செய்யப்பட்ட 95000 கோடியில் 65000 கோடி வரி கட்டியவர்களுக்கே திருப்பி செலுத்திட வேண்டும்.அதிகப்படியான தொகையை முறையிட்டவர்களை கண்காணிக்கும் பொறுப்பை மேற்கொள்ள வருமான வரித்துறையை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டதை விட எளிமையாக அழிந்துகொண்டிருக்கின்றது. இதை மீட்டெடுக்க சுமார் நான்கு ஆண்டுகள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். யார் கையிலும் மந்திரக்கோல் இல்லை. ஆகவே உடனடியாக எடுக்கப்படும் வழிமுறைகள் மட்டுமே சிறப்பான முடிவுகளை தரும்.
பிரதமர் அவர்கள் ஏழ்மையில் வாடுபவர்களை அருகிலே இருந்து கண்டிப்பதாக கூறுகிறார். ஆனால் நிதியமைச்சர் அதிகப்படியான நேரம் உழைத்துக்கொண்டிருக்கிறார் அனைத்து இந்தியர்களும் சமமாக நெருக்கடியை காண உழைக்கிறார்.
குறிப்பு : மொழிபெயர்ப்பில் சில தகவல்கள் மொழி பெயர்ப்பிற்காக மாற்றி சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கும் .
நேரடியாக படிக்க http://indianexpress.com/article/opinion/columns/yashwant-sinha-arun-jaitley-gst-demonetisation-narendra-modi-economy-bjp-i-need-to-speak-up-now-4862716/
நன்றி
ஸ்ரீதரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக