வெள்ளி, 15 ஜூலை, 2016

ஆடி தள்ளுபடி! ஆடி தள்ளுபடி! ஆடி தள்ளுபடி! அப்படி என்ன இருக்கின்றது இந்த ஆடி மாதத்தில்....



ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே 50% தள்ளுபடி, மரம் தருகிறோம், காய்கறிகள் பழங்கள் தருகின்றோம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற ஆடி தள்ளுபடி விளம்பரத்தை காணாமல் டிவியையும் கடைகளையும் காண முடியாது. அப்படி என்ன இருக்கின்றது இந்த ஆடி மாதத்தில்...

உண்மையாக சொல்லப்போனால் அப்படி எந்த சிறப்பும் ஆடி மாதத்தில் கிடையாது. அட்சயதிருதியை விற்பனை ஒருநாள் என்றால் ஆடி தள்ளுபடி விற்பனை ஒரு மாதம் அவ்வளவுதான். இதுவும் ஒரு விற்பனை தந்திரம் தான்.

தீபாவளி பொங்கலுக்கு முன்னாள் வரும் ஆடி மாதம் :

பொதுவாகவே அனைத்து கடை நிறுவனங்களும் தீபாவளி அதை தொடர்ந்து வரும் பொங்கல் விழாக்களுக்கு புதிய டிசைன்களில் ஆடைகளை இறக்குமதி செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் அந்த கடையின் வாடிக்கையாளர்கள் வேறு கடைக்கு செல்லும் வாய்ப்பு நேரிடலாம். எனவே கடை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள பழைய ரகங்களை விலை குறைத்து விற்பனை செய்ய முன்வருகின்றன. பழைய ஸ்டாக்குகளை காலி செய்து விட்டு புதிய ஆடைகளை இறக்குமதி செய்யவே ஆடி தள்ளுபடி விற்பனை.

உண்மையாகவே 50% வரை விலை குறைப்பா??

கிடையாது. உண்மையாக சொல்லப்ப்போனால் கடை நிறுவனங்கள் 5 முதல் 15% வரையே விலை குறைப்பு செய்கின்றன. அதுவும் அடக்க விலையில் அந்த விலை குறைப்பு இருக்காது. மாறாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேண்டிய லாபத்தில் 5 முதல் 15% வரை குறைக்கின்றன. அப்படி குறைப்பதனால் வாடிக்கையாளர்கள் பயனடைவதோடு கடைகளுக்கும் விற்பனை அதிகரித்து சரக்குகள் காலியாகின்றன.
50% தள்ளுபடி என்பது ஒரு சில ஆடை வகைகளுக்கு மட்டுமே அளிப்பார்கள்.

ஆடி தள்ளுபடியில் மக்கள் கவனிக்க வேண்டியது என்ன?



பெரும்பாலான கடைகள் ஆடித்தள்ளுபடியில் வாங்கும் ஆடைகளை திருப்பி வாங்கி மாற்றி தர ஒத்துக்கொளவது இல்லை. எனவே வாங்கும் போதே சரியான அளவிலான, நல்ல துணிமணிகளை வாங்கிக்கொள்ள வேண்டும்.

தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக வெளியூர் செல்லும் இடத்தில் எல்லாம் ஆடித் தள்ளுபடியில் வாங்காமல் முன்னணி நிறுவனம், நம்பிக்கையான தள்ளுபடி என்றால் மட்டுமே வெளியூர்களில் வாங்கலாம். அவசரத்தில் ஆசை ஆசையாக வாங்கிவிட்டு, ஊருக்குப் போனபிறகு ஓட்டை விழுந்திருக்கிறது என்று மீண்டும் கிளம்ப முடியாது. எனவே, வீட்டில் உள்ளவர்களின் தேவை தெரியாமல், அளவு தெரியாமல் எடுத்து அவதிபடவேண்டாம். உள்ளூரில் வாங்குவதே பொருத்தமானது.

ஆடி தள்ளுபடி! ஆடி தள்ளுபடி! ஆடி தள்ளுபடி!

ஸ்ரீ  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக