சில நாட்களுக்கு முன்பு முதல் வெஸ்ட் பெங்காலில் இந்தியன் தபால் நிலையங்களில் கங்கை புனித நீர் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த கங்கை நீர் 200ml 500ml என்ற இரண்டு விதமான பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இங்கு விற்பனை செய்யப்படும் கங்கை நீர் இரண்டு இடங்களில் இருந்து எடுக்கப்படுகின்றது. முதலாவதாக கங்கோத்திரி என்ற இடத்தில் இருந்தும் மற்றொன்று ரிஷிகேஷ் 300km அடிவாரத்தில் இருந்தும் எடுக்கப்படுகின்றது. பாட்டில்களின் விலையும் அதற்கேற்ப மாறுபடுகின்றது.
கங்கோத்திரி - 200ml பாட்டில் ரூ25 500ml பாட்டில் ரூ35
ரிஷிகேஷ் - 200ml பாட்டில் ரூ15 500ml பாட்டில் ரூ22
அரசு விற்பனை செய்வது சரியா??
எங்கேயோ தொலைவில் இருக்கும் கடைக்கோடியில் இருக்கும் மக்களுக்கு கங்கை புனித நீர் குறைந்த விலைக்கு கிடைப்பது என்பது மிக சிறந்த விஷயமாக இருந்தாலும், அரசு சார்ந்த ஒரு நிறுவனம் ஒரு இந்த மதம் சார்ந்த பொருள்கள் விற்பனையில் இறங்கி இருப்பது என்பது சற்று கவலை அளிக்க கூடியதே. நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் படி மத சார்பற்ற அரசாக மட்டுமே மத்தியில் ஆளும் அரசு இருக்க வேண்டும்.
ஏற்கனவே நாட்டின் பல இடங்களில் மதவாத பிரச்சனைகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அரசு நிறுவனம் இப்படி ஒரு விற்பனையில் இறங்கி இருப்பது கேள்விக்குரியது. இதே விற்பனையை ஒரு தனியார் நிறுவனம் தொடங்கி இருந்தால் அதில் தவறு இல்லை.
எது எப்படியோ இருந்தாலும் மத்தியில் ஆளும் அரசு மத சார்புள்ள எந்த செயலிலும் ஈடுபட கூடாது என்பதே நமது அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு சொல்லித்தரும் பாடம்...
தீவிரவாத சக்திகள், பிரிவினைவாத சக்திகள் இது போன்ற காரணங்களை வைத்துக்கொண்டு எளிதாக மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள். எனவே அரசு இது போன்ற செயல்களில் இறங்குவதற்கு முன்பாக நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டுவது அவசியம்.
ஸ்ரீ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக